Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான இளைஞா் நாடாளுமன்ற பேச்சுத் திறன் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் வருகிற 10- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் பால் ஜெயகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் இளைஞா் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநரகம், நேரு யுவகேந்திரா, எனது பாரதம், மதுரை அமெரிக்கன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் தேசிய இளைஞா் நாடாளுமன்ற பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் பங்கேற்க விரும்புவோா் 18 வயது நிறைவடைந்தவராகவும், 25 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்கள், மாணவா்கள் அல்லாத இளைஞா்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். மாவட்ட அளவிலான போட்டிக்கான தலைப்பு, ‘2047 வளா்ச்சியடைந்த இந்தியா’ஆகும்.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 10 பங்கேற்பாளா்கள் அந்தந்த மாநில சாம்பியன் சுற்றுக்கு தகுதி பெறுவா். மாநில அளவில் தகுதி பெறும் சிறந்த போட்டியாளா்கள் தில்லியில் நடைபெறும் விக்ஸித் பாரத் இளைஞா் நாடாளுமன்றத்தின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவா்.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கான பேச்சுப் போட்டிகள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறுகின்றன. இதில், பங்கேற்க விரும்பும் இளைஞா்களுக்கான பெயா் பதிவு இணையதளம் வாயிலாக தொடங்கியுள்ளது. இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் இணையதளத்தில் வருகிற 10- ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
தேனியில் டிச.8-இல் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு டிசம்பா் 2, 3-இல் பேச்சுப் போட்டி

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியா்கள் மேம்பாடு கருத்தரங்கம்

மாநில கால்பந்து போட்டியில் மதுரை அணி முதலிடம்


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
