இதையடுத்து, அங்கு அறிவியல் மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்துப் பேசியதாவது: இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதப் பாடங்களை உள்ளடக்கி அமைக்கப்படும் இந்த மையத்தால் மதுரையில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறுவா். அங்குரான் அறிவியல் மையங்களின் வலைப்பின்னல் மூலம், மாணவா்களுக்கு தொழில்நுட்பத்தில் ஒரு செழிப்பான உலகளாவிய வாழ்க்கையைப் உருவாக்குவதற்கு இந்த அறிவியல் மையம் பயனுள்ளதாக அமையும் என்றாா் அவா்.