வறட்சி எதிரொலி:அரிசி விலை உயர்வு
தமிழகத்தில் வறட்சி எதிரொலியாக அரிசி விலை கிலோவுக்கு ரூ.6 வரை அதிகரித்துள்ளது. லாரி வாடகை உயர்வால் விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.


தமிழகத்தில் வறட்சி எதிரொலியாக அரிசி விலை கிலோவுக்கு ரூ.6 வரை அதிகரித்துள்ளது. லாரி வாடகை உயர்வால் விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக சாப்பாட்டு அரிசி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கடந்த மாத விலையைவிட, தற்போது கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.6 வரை அதிகரித்துள்ளது. அதேபோல், ரூ.28-க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி அரிசி தற்போது ரூ.34-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர், புதுவயல், திருப்பூர் மாவட்டம் காங்கேயம், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அரிசி ஆலைகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சாப்பாட்டு அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஆரணி, வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளிலிருந்து சாப்பாட்டு அரிசி மட்டுமின்றி இட்லி அரிசியும் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், ஆந்திரம், சத்தீஸ்கர், கர்நாடகம், ஓடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து லாரிகள் மூலம் தமிழகத்திற்கு நெல் கொண்டு வரப்படுகிறது. இம்மாநிலங்களில் இருந்து தமிழக வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்வதால், ஒரு கிலோ நெல் விலை ரூ.20-இல் இருந்து ரூ.25 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நெல் மூட்டைகளை ஏற்றுவதற்கு ஒரே நேரத்தில் அதிக லாரிகள் தேவைப்படுதால் லாரி வாடகை கட்டணமும் உயர்ந்து வியாபாரிகளுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், தமிழகத்தில் 30 நாள்கள் இயங்க வேண்டிய நெல் அரவை ஆலைகள் போதிய இருப்பு இல்லாததன் விளைவாக 10 நாள்கள் மட்டுமே செயல்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 40 நெல் அரவை ஆலைகள் உள்ளன. அதில், தற்போது 10 ஆலைகள் மட்டுமே செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தொழில் வர்த்தக சங்கத் தலைவர் கிருபாகரன் கூறியது:
தமிழகத்தில் சம்பா மற்றும் குருவை சாகுபடி பாதிக்கப்பட்டதன் எதிரொலியாகவே அரிசி விலை அதிகரித்துள்ளது. வழக்கமாக ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்தே அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்படும். தற்போது வறட்சி பாதிப்பு அதிகமாக உள்ளதால் சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வியாபாரிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குவிண்டாலுக்கு ரூ.200 வரை வசூலிக்கப்பட்ட லாரி கட்டணம், தற்போது ரூ.300 ஆக அதிகரித்துள்ளது.
இதுபோன்ற காரணங்களால் அரிசி விலையும் உயர்ந்துள்ளது என்றார்.
அரிசி விலை உயர்வு விவரம்
ஒரு மாதத்திற்கு தற்போதைய
முந்தைய விலை விலை
சாப்பாட்டு அரிசி
பொன்னி ரூ.34 ரூ.40
ஐஆர்20 ரூ.26 ரூ.32
கல்சர் ரூ.27 ரூ.33
டீலக்ஸ் பொன்னி ரூ.39 ரூ.44
ஓராண்டுக்கு
முந்தைய
டீலக்ஸ் பொன்னி ரூ.45 ரூ.50
இட்லி அரிசி
சிஆர் ரூ.25 ரூ.31
கிட்டா ரூ.30 ரூ.35.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...