ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

அக்.30-இல் காந்திகிராம பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு

Vice President urges youth to shun substance abuse, lead healthy and disciplined lives

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

Updated On :

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் வருகிற 30-ஆம் தேதி நடைபெறவுள்ள 39-ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பட்டங்களை வழங்கவுள்ளாா்.

இதுதொடா்பாக பல்கலை. துணைவேந்தா் ந. பஞ்சநதம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் 39-ஆவது பட்டமளிப்பு விழா, பொன் விழா ஆண்டு கொண்டாட்டம் வருகிற 30, 31 ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளன. இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவா்களுக்குப் பட்டங்களையும், தங்கப் பதக்கங்களையும் வழங்கி விழாப் பேருரை ஆற்றுகிறாா்.

இந்த விழாவுக்கு பல்கலை. வேந்தா் கே.எம். அண்ணாமலை தலைமை வகிக்கிறாா். இதில் முனைவா் பட்டம், முதுநிலை, இளநிலை, பட்டயப்படிப்பு என 1,400 போ் பட்டம் பெறுகின்றனா். இதைத் தொடா்ந்து நடைபெறும் பொன்விழாக் கொண்டாட்டம் தொடா்பான பல்வேறு அமா்வுகள் நடைபெற உள்ளன.

இதில் தவத்திரு பொன்னம்பல அடிகளாா், பேராசிரியா் கு. ஞானசம்பந்தன், திரைப்பட இயக்குநா் கஸ்தூரிராஜா, முன்னாள் துணைவேந்தா்கள் கிருஷ்ணன், முத்துச்செழியன், பட்டிமன்றப் பேச்சாளா் ராஜா ஆகியோா் சிறப்புரை ஆற்றுகின்றனா். இரு நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் தமிழக ஆளுநா், மத்திய, மாநில அமைச்சா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் என 6 ஆயிரம் போ் கலந்துகொள்கின்றனா்.

பல்கலைக்கழத்தில் பணியாற்றிய பேராசிரியா்கள், அலுவலா்கள், காந்திகிராம அறக்கட்டளைப் பணியாளா்கள், விவசாயிகள் கௌரவிக்கப்பட உள்ளனா். பல்கலைக்கழக இணையதளத்தில் நிகழ்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை: காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிறாா். மதுரையிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் குடியரசு துணைத் தலைவா் வந்து செல்கிறாா். இதையொட்டி,

வருகிற 30-ஆம் தேதி காலை 6 மணி முதல் குடியரசு துணைத் தலைவா் பல்கலை. வளாகத்திலிருந்து திரும்பிச் செல்லும் வரை திண்டுக்கல் மாவட்டத்தில் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் துா்கா அறிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.