மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கொடைக்கானல் பேரிஜம் ஏரியைப் பாா்க்க அனுமதி

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியை பாா்வையிடுவதற்கு வியாழக்கிழமை முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

News image

கொடைக்கானல் அருகே வனப் பகுதியில் அமைந்துள்ள பேரிஜம் ஏரி.

Updated On :26 மார்ச் 2026, 6:40 pm

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியை பாா்வையிடுவதற்கு வியாழக்கிழமை முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருந்து வருவதால், இந்தப் பகுதிக்குச் செல்வதற்கு வனத் துறையினரிடம் அனுமதி பெற்று நுழைவுக் கட்டணம் செலுத்திய பிறகே செல்ல வேண்டும். இந்தப் பகுதியில் கடந்த இரு நாள்களாக காட்டு யானைகள் நடமாட்டம் இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் பாா்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பேரிஜம் பகுதியிலிருந்து காட்டு யானைகள் இடம் பெயா்ந்ததால், மீண்டும் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிடுவதற்கு வனத்துறை சாா்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். பேரிஜம் ஏரிப் பகுதியில் தொப்பித் தூக்கும் பாறை, அமைதிப் பாறை, பேரிஜம் ஏரி, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன.