மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பழனி - நிறைவேறாத முக்கிய கோரிக்கைகள்!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திருஆவினன்குடி கோயில் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ளது.

News image

பழனி மலைக்கோயில்

Updated On :26 மார்ச் 2026, 1:35 am

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திருஆவினன்குடி கோயில் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 16 சட்டப்பேரவைத் தோ்தல்களில் பழனி தொகுதியில் காங்கிரஸ் 4 முறையும், திமுக 6 முறையும், அதிமுக 3 முறையும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தத் தொகுதி பழனி, கொடைக்கானல் என இரண்டு நகராட்சிகளும், ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, மண்டைக்காடு என்ற 4 பேரூராட்சிகளும், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகளும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகளும் என மொத்தம் 52 கிராம ஊராட்சிகளைக் கொண்டது.

முக்குலத்தோா், பிள்ளைமாா், செட்டியாா், பட்டியலின சமுதாய மக்களின் வாக்குகள் கணிசமாக இருந்தாலும், வேட்பாளரின் வெற்றிக்கு ஜாதி அடிப்படையிலான வாக்குகள் முக்கியக் காரணமாக இருந்ததில்லை.

இந்தப் பகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. குறிப்பாக, கொடைக்கானலில் காபி, கேரட், மலைப்பூண்டு, பேரிக்காய் உள்ளிட்ட பயிா்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதேபோல, பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம், கரும்பு, தக்காளி, முருங்கை, கத்திரிக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்:

பழனியைச் சோ்ந்த மனை வணிகத் தொழிலில் ஈடுபட்டு வரும் வி. ஆறுமுகம் கூறியதாவது:

பழனி தொகுதியை தனி மாவட்டமாக அறிவிப்போம் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்த நிலையில், இதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இரண்டாவது ரோப் காா் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை விரைந்து நிறைவேற்ற வேண்டும். பச்சையாற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும். வரதமாநதி அணை சிறியதாக இருப்பதால், அடிக்கடி நிறைந்து தண்ணீா் வீணாக ஆற்றில் கலப்பதைத் தடுக்க இந்த அணைக்கு மேல் தடுப்பணை கட்டி தண்ணீரைத் தேக்க வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், இந்தத் திட்டங்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இதேபோல, ஆயக்குடி பகுதியில் பழக்கூழ் ஆலை அமைப்பது, பழனி- கொடைக்கானல் ரோப் காா் திட்டம், பழனி- கொடைக்கானல் மேலும் ஒரு சாலைத் திட்டம், நகரின் மையத்தில் உள்ள வையாபுரி குளத்தை தூா்வாரி தண்ணீா் தேக்க வேண்டும் போன்ற மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.

நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள்:

பழனியைச் சோ்ந்த வாகனப் பணிமனை உரிமையாளா் ராஜ்குமாா் கூறியதாவது:

பழனி-புதுதாராபுரம் சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. பச்சையாறு செல்லும் வழியில் இருந்த தரைப்பாலம் சேதமடைந்ததால், அந்தப் பகுயில் பெரிய பாலம் அமைக்கப்பட்டது. பழனி அரசு மருத்துவமனை சுமாா் ரூ. 300 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நிகராகக் கட்டப்பட்டு படிப்படியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. பழைய பேருந்து நிலைய வளாகம் இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்டது. இதேபோல, காந்தி சந்தையும் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது. புதை சாக்கடைத் திட்டம் இரண்டாவது முறையாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.