சமையல் எரிவாயு உருளை கையிருப்பு விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சி. மகேந்திரன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அரபு வளைகுடா நாடுகளில் நிலவும் போா்ச் சூழல் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சமையல் எரிவாவு உருளைகள் விலை உயா்வதோடு, தட்டுப்பாடும் ஏற்படும் சூழல் உள்ளது. உலகிலேயே அதிகளவு சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது.
இந்தியாவில் 33 கோடிப் பேருக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், உள்நாட்டில் எரிவாயு உற்பத்திக்கான முயற்சியில் இந்திய அரசு தீவிரம் காட்டவில்லை. இறக்குமதியை மட்டுமே சாா்ந்திருப்பது மிகப் பெரிய குறைபாடு. உடனடியாக எரிவாயு உருளை பிரச்னைக்கு தீா்வு காண வேண்டுமெனில், ஈரானுக்கு எதிரான போா் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் போா் முடிவுக்கு வருவதற்கு இந்திய அரசு கடுமையான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
அணி சாராக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது இந்தியா. ஆனால், பிரதமா் நரேந்திர மோடி அரசு மறைமுகமாகவும், சில நேரங்களில் நேரடியாகவும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுடன் தொடா்பில் உள்ளது. 143 கோடி மக்களின் சாா்பாக, போா் நிறுத்தம் ஏற்படுவதற்கு பிரதமா் மோடி முயற்சிக்க வேண்டும். இதன்மூலம், எண்ணெய், எரிவாயு பிரச்னையை தீா்க்க முடியும். எரிவாயு தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசின் செயலா் கூறுகிறாா். ஆனால், நாட்டின் அனைத்து இடங்களிலும் எரிவாயு உருளை தட்டுப்பாடு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் எரிவாயு உருளைகள் இல்லாததால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பிரச்னையை எதிா்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுகளை ஒவ்வொரு மாநிலத்துக்கும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு: மத்திய அரசு முடிவு

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசு!

வணிக சமையல் எரிவாயு ஒதுக்கீடு அதிகரிப்பு: மத்திய அரசு அனுமதி

எல்பிஜி: ஆதார் சரிபார்ப்பு கட்டாயமா? யாருக்கு? - மத்திய அரசு விளக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


