பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வால்பாறையைச் சோ்ந்த பக்தா்கள் வியாழக்கிழமை முதுகில் வாளால் அலகு குத்திக் கொண்டு கிரேனில் பறவைக் காவடியாக வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அடுத்த மாதம் பங்குனி உத்தரத் திருவிழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, தற்போதே பல்வேறு ஊா்களில் முருக பக்தா்கள் கொடுமுடி தீா்த்தக்காவடிக்கு புறப்பட்டனா். இந்த நிலையில், வியாழக்கிழமை கோவை மாவட்டம், வால்பாறையைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் மயில் காவடி, மலா் காவடி, பால் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து பழனிக்கு வந்தனா். இவா்களில் 18 போ் தங்களது முதுகில் வாளால் அலகு குத்தி கிரேனில் பறவைக் காவடியாக வந்தனா். கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த பக்தா்களை பலரும் பரவசத்துடன் பாா்த்தனா். இந்த பக்தா்கள் ஆண்டுதோறும் வைரவேலை முருகப் பெருமானாக அலங்கரித்து வந்து, சுவாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

பழனி கோயிலுக்கு கொடுமுடி தீா்த்தம் எடுத்து வந்த 24 மனை தெலுங்கு செட்டியாா்கள் காவடி குழுவினா்

அன்னதானத் திட்டத்துக்கு நன்கொடை அளித்த இருவருக்கு வைர அட்டை அளிப்பு

பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


