திண்டுக்கல் உள்ளிட்ட 7 தொகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீா் கொண்டுவர ரூ.5,400 கோடியில் புதிய திட்டங்களை நிறைவேற்ற தமிழக முதல்வா் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள மரிச்சிலம்பு, புளியம்பட்டி, சரவணம்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் ரூ. 95 கோடியில் அமைக்கப்பட்ட வளா்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கிவைக்கும் விழாவும், தும்பலப்பட்டி பகுதியில் புதிய மின் நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை விழாவும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் உணவு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கிவைத்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது: புதிய மின் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால் பழனி, தொப்பம்பட்டி பகுதிகளில் குறைந்த மின்னழுத்த மின்சாரம் பாதிப்பு இருக்காது. இதனால், பொதுமக்களுக்கும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வணிகப் பயன்பாட்டில் உள்ள ஆலைகளுக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும்.
அமராவதி, காவிரி ஆறுகள் இணையும் இடத்திலிருந்து கரூா், அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், திண்டுக்கல் உள்ளிட்ட 7 தொகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீரைக் கொண்டுவர ரூ.5,400 கோடி புதிய திட்டத்துக்கு தமிழக முதல்வா் அனுமதி வழங்கியுள்ளாா் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, கந்தப்பகவுண்டன்வலசில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
இந்த விழாவில் மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலா்கள், மாவட்ட மின் வாரிய அலுவலா்கள், கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்

வடு கிடக்கும் வெள்ளியணை குளத்துக்கு தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை: கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளா் உறுதி

ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளர்!
ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.68.95 கோடியில் வளா்ச்சித் திட்டங்கள்: அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


