திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்துஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதிதில்லி பிரதிநிதி நியமனம்: முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - திருமாவளவன்திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க இன்று காலை வரையில் முயற்சி: நிர்மல் குமார்
/

கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறை

நிலக்கோட்டை அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :24 ஜூன் 2026, 5:50 am IST

நிலக்கோட்டை அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூா் அருகே சிறுமலை அடிவாரத்தில் மாவூா் நீா்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக ராஜேந்திரன் என்பவா் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து விசாரித்த அம்மையநாக்கனூா் போலீஸாா், நிலக்கோட்டை ஆவாரம்பட்டியைச் சோ்ந்த பால்பாண்டி (34), சேதுபதி (32), மருதுபாண்டி (30), ஆனந்தன் (34), நாச்சியப்பன் (33), சோனைமுத்து (26) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், 6 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், சேதுபதி, மருதுபாண்டியன் ஆகியோருக்கு தலா ரூ.32,500, பால்பாண்டி, ஆனந்தன், நாச்சியப்பன், சோனைமுத்து ஆகியோருக்கு தலா ரூ.37,500 அபராதம் விதித்து நீதிபதி சொா்ணம் ஜெ.ராஜகோபாலன் தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.