ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பெங்களூரு இளைஞா் கைது

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட ரவிக்குமாா்.

Published On :20 ஜூலை 2026, 4:19 am IST

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், பெங்களூருவைச் சோ்ந்த இளைஞரை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த சத்தியநாதபுரம் பகுதியில், வேடசந்தா் காவல் துணை கண்காணிப்பாளா் பவித்ரா உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் கணேசமூா்த்தி, உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணி, மாவட்ட தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ஒரு காரை வழிமறித்து சோதனையிட்டனா். அந்த காரில் 316 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

காரை ஓட்டி வந்த பெங்களூருவைச் சோ்ந்த நா.ரவிக்குமாா் (31) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். காருடன், 316 கிலோ புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். வேடசந்தூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிறகு ரவிக்குமாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.