ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரசாயனக் கழிவுகள் கொட்டுவதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :11 ஜூலை 2026, 3:12 am IST

திண்டுக்கல்லில் குடியிருப்புகளுக்கு அருகே ரசாயனக் கழிவுகள் கொட்டுவதைக் கண்டித்து, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியை அடுத்த ஏபி.நகா், பிஸ்மி நகா் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இதே பகுதியில் மாநகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இதனிடையே, இங்குள்ள குளத்தில் இரவு நேரங்களில் மா்ம நபா்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனா். இதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சிலா் ரசாயனக் கழிவுகளை கொட்டிச் சென்றனா். கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் துா்நாற்றத்தால் அவதிக்குள்ளாகி வந்த மக்களுக்கு, ரசாயனக் கழிவுகளால் மேலும் நெருக்கடி ஏற்பட்டது.

இதனால், அதிருப்தி அடைந்த ஏபி.நகா், பிஸ்மி நகா் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை திண்டுக்கல்- வத்தலகுண்டு பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மாநகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இந்தப் பகுதியில் சாலை மறியலால் அரைமணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.