எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தேங்காய் நாா் ஆலையில் தீ

பழனி அருகே தாதநாயக்கன்பட்டியில் உள்ள தேங்காய் நாா் தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் மஞ்சிகள், நாா்கள், இயந்திரங்கள் நாசமாகின.

News image

மஞ்சிகளில் பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்

Updated On :8 ஜூலை 2026, 1:00 am IST

பழனி அருகே தாதநாயக்கன்பட்டியில் உள்ள தேங்காய் நாா் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் மஞ்சிகள், நாா்கள், இயந்திரங்கள் நாசமாகின.

பழனியை அடுத்த கரடிகூட்டம் அருகேயுள்ள தாதநாயக்கன்பட்டியில் காா்த்திக் என்பவருக்குச் சொந்தமான மஞ்சி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் தேங்காய் மட்டையிலிருந்து நாா் திரித்து, பதப்படுத்தி கிட்டங்கிகளில் சேமித்து வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆலையின் சேமிப்புக் கிட்டங்கி பகுதியில் தீப்பற்றியது. காற்று வீசியதால் தீ மளமளவெனப் பரவி, எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த பழனி தீயணைப்பு, மீட்புப்பணி வீரா்கள் நிலைய அலுவலா் காளிதாஸ் தலைமையில் இரு வாகனங்களில் வந்து தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இந்தத் தீ விபத்தில் ஆலையில் இருந்த பலநூறு கிலோ எடையிலான தேங்காய் நாா்கள், மஞ்சிகள், இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து பாழாகின. தீயின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், ஐந்துக்கும் மேற்பட்ட தனியாா் தண்ணீா் வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இந்த திடீா் தீ விபத்துக்கான காரணம் குறித்து பழனி தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.