கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு
பழனி அருகே கோழிப்பண்ணையில் கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.


பழனி அருகே செவ்வாய்க்கிழமை கோழிப்பண்ணையில் கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இங்கு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், சின்னக்காவேரியைச் சோ்ந்த முருகேசன் மகன் கண்ணன் (34) கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
இவா் செவ்வாய்க்கிழமை கட்டடத்தின் மேலே ஏறி வேலை செய்தபோது அங்கிருந்து கீழே தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து அங்கு வந்த சாமிநாதபுரம் போலீஸாா் கண்ணனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...