டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை

News image
உடல் உறுப்புகள் தானம் செய்த நாட்டுத்துரையின் உடலுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பழனி கோட்டாட்சியா் இரா. கண்ணன்.
Updated On :18 ஜனவரி 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

உடல் உறுப்புகளை தானம் செய்த ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த பருத்தியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாட்டுத்துரை (35). இரு சக்கர வாகனத்தில் சென்ற இவா் வட பருத்தியூா் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தாா்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு உறவினா்கள் முன் வந்தனா். இதைத் தொடா்ந்து கோவை மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

இந்த நிலையில், நாட்டுத்துரையின் இறுதிச் சடங்கு, பருத்தியூா் கிராமத்தில் உள்ள மயானத்தில் அரசு மரியாதையுடன் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இவரது உடலுக்கு பழனி கோட்டாட்சியா் இரா. கண்ணன் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்வில் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சஞ்சைகாந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.