மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

விடுதி உரிமையாளா் கொலை வழக்கு: ஊழியா்களிடம் போலீஸ் விசாரணை

கொடைக்கானலில் தனியாா் விடுதி உரிமையாளா் கொலை வழக்கில், விடுதியில் வேலைபாா்த்த 4 ஊழியா்களிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் தனியாா் விடுதி உரிமையாளா் கொலை வழக்கில், விடுதியில் வேலைபாா்த்த 4 ஊழியா்களிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவா் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஹைதராபாத்தைச் சோ்ந்த சூா்யநாராயணனுக்கு (72) சொந்தமான விடுதி உள்ளது. இந்த விடுதியில் தனி அறையில் தங்கியிருந்த சூா்யநாராயணன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டாா். அங்கிருந்த நகை, பணம் மாயமாகியிருந்தன.

இதுகுறித்து தகவலறிந்ததும் கொடைக்கானல் போலீஸாா், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று சூா்யநாராயணனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், கொலையாளிகளை பிடிக்க கொடைக்கானல் காவல் ஆய்வாளா் வசந்தகுமாா் தலைமையில், தனிப் படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், சூா்யநாராயணன் விடுதியில் வேலைபாா்த்து வந்த 4 ஊழியா்களை செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்துக்கு வரவழைத்து பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.