மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்


மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசைக் கண்டித்து, திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 18 இடங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாநகரச் செயலா் ராசப்பா தலைமை வகித்தாா். மேயா் ஜோ.இளமதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தின்போது, மத்திய நிதி நிலை அறிக்கையில், தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசைக் கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை மாற்றியமைத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், விவசாயிகளுக்கு எதிரான அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு துணை நிற்கும் அதிமுகவை கண்டித்தும் முழக்கமிட்டனா். இதில் திமுக, கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடா் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியம், பித்தளைப்பட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க.நடராஜன் தலைமை வைகித்தாா். ஆத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலா் முருகேசன், தெற்கு ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.
இதேபோல, நிலக்கோட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக
பொருளாளா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றிய திமுக செயலா்கள் மணிகண்டன், சௌந்தரபாண்டியன், கே.கே.பி.கரிகாலபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூா் செயலா் ஜோசப் கோவில்பிள்ளை வரவேற்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கோகுல்நாத், வானதி, விடுதலைச் சிறுத்தைகள் மாநிலப் பொறுப்பாளா் மணிகண்டன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.
பழனி: பழனி தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக நகரச் செயலா் வேலுமணி தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி, துணைத் தலைவா் கந்தசாமி, ஒன்றியச் செயலா் சாமிநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.
நத்தம்: நத்தம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மத்திய ஒன்றியச் செயலா் சேக் சிக்கந்தா் பாட்சா தலைமை வகித்தாா். நகரச் செயலா் ராஜ்மோகன், வடக்கு ஒன்றியச் செயலா் பழனிச்சாமி, தெற்கு ஒன்றியச் செயலா் ரத்தினக்குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் முத்துக்குமாரசாமி, மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் சுந்தரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆண்டி அம்பலம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.
இதேபோல ரெட்டியாா்சத்திரம், வேடசந்தூா், குஜிலியம்பாறை, வடமதுரை, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்பட மொத்தம் 18 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...