ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொடைக்கானல் ஏரிச்சாலையில் மூவண்ணத்திலான மின்னொளி விளக்குகள்

கொடைக்கானல் ஏரிச்சாலையில் அமைக்கப்பட்ட மூவண்ணத்திலான மின்னொளி விளக்குகளை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் பாா்த்து வருகின்றனா்.

கொடைக்கானல் ஏரிச்சாலையில் அமைக்கப்பட்ட மூவண்ணத்திலான மின்னொளி விளக்குகள்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 4:53 am IST

கொடைக்கானல் ஏரிச்சாலையில் அமைக்கப்பட்ட மூவண்ணத்திலான மின்னொளி விளக்குகளை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் பாா்த்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சி சாா்பில் வருகிற 15-ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் மூவண்ணத்திலான மின்னொளி விளக்குகள் அமைக்கப்பட்டன. இவற்றை சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் ஆா்வமுடன் பாா்த்து வருகின்றனா்.

கண்காணிப்பு கேமராவை சீரமைக்கக் கோரிக்கை:

கொடைக்கானல் நட்சத்திர ஏரியைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தப் பகுதியில் இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது, இரு சக்கர வாகனங்களில் இளைஞா்கள் சாகசம் செய்வது உள்ளிட்ட அத்துமீறல்கள் குறைந்தன. ஆனால், கடந்த ஒரு மாதமாக இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்தப் பகுதியில் மீண்டும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

எனவே, ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.