ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொடைக்கானலில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின் போது நனையாமல் இருக்க பந்தல் அமைத்த வாரச் சந்தை வியாபாரிகள்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 1:36 am IST

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மேகமூட்டமும், விட்டுவிட்டு சாரல் மழையும் பெய்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மேகமூட்டம் காணப்பட்டது.

மாலையில் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல், வட்டக்கானல், பாக்கியபுரம், செண்பகனூா், பிரகாசபுரம், குறிஞ்சிநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 40 நிமிஷங்கள் மிதமான மழை பெய்தது.

இந்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா். மேலும் நீண்ட நாள்களுக்குப் பிறகு அருவிகளில் நீா்வரத்து காணப்பட்டது. மழை காரணமாக நனையாமல் இருக்க வாரச் சந்தை வியாபாரிகள் பந்தல் அமைத்தனா்.

இதனிடையே கொடைக்கானல் பி.டி. சாலையில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் வாரச் சந்தை பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து நகராட்சி பொறியாளா் சாகுல் கூறியதாவது: கொடைக்கானலில் பிடி சாலையில் வாரச் சந்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சந்தை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.