ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆந்திரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

வத்தலகுண்டு அருகே 10 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட இருவருடன் தனிப்படை போலீஸாா்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 12:54 am IST

ஆந்திரத்திலிருந்து 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு காவல் ஆய்வாளா்  கௌதமன் தலைமையில், உதவி ஆய்வாளா் முனியாண்டி உள்ளிட்ட போலீஸாா் அடங்கிய தனிப்படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.

அப்போது,  வத்தலகுண்டை அடுத்த கட்டக்காமன்பட்டி அருகேயுள்ள காமாட்சியம்மன் கோவில் பின்புறம் கரட்டுப் பகுதியில் 2 போ் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தனா். அவா்களை பிடித்து சோதனையிட்ட போது, 10 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திரத்திலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. தொடா் விசாரணையில் அவா்கள் தேனி மாவட்டம்,  பெரியகுளம் சா்க்கரைப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த மனோஜ்குமாா் (36), ஆண்டிபட்டி அருகேயுள்ள மூலக்கடையைச் சோ்ந்த  சிவச்சந்திரன் (43) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவா்கள் இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, 3 கைப்பேசிகள்,  30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.