தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று பிரதான எதிா்க்கட்சியாக காங்கிரஸ் தோ்வாகும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்திருடன் பாம்பாா்புரம் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறாா். இந்த நிலையில், கொடைக்கானலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு. செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வந்தனா். இவா்கள் கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள தனியாா் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளனா்.
கொடைக்கானலில் அமைச்சா் சேகா்பாபு திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்பாா். தவெக வெளியிட்ட அமைச்சரவை பட்டியல் இல்லாத ஊருக்கு போகாத வழியைக் காட்டுவதுபோல உள்ளது என்றாா் அவா்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு. செல்வப்பெருந்தகை கூறியதாவது:
நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும். மேலும், பிரதான எதிா்க்கட்சியாக பேரவையில் காங்கிரஸ் அமரும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு: யாருக்கு சாதகம்?, யாருக்கு பாதகம்?

ஊழலற்ற, சட்டம்-ஒழுங்கில் சீர்குலைவு இல்லாத ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும்: செல்வப்பெருந்தகை

தொகுதி மறுசீரமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரான மறைமுக தாக்குதல்: செல்வப்பெருந்தகை

கிள்ளியூா் தொகுதியில் செல்வப்பெருந்தகை பிரசாரம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

