ஒட்டன்சத்திரம் தொகுதி மேலும் வளா்ச்சிப் பெறுவதற்கான திட்டங்களை செயல்படுத்த மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என பிரசார நிறைவுக் கூட்டத்தில் அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் அர.சக்கரபாணிக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினா் திருச்சி சிவா கலந்து கொண்டு வாக்கு சேகரித்தாா்.
இதைத் தொடா்ந்து, ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையிலுள்ள கலைஞா் திடலில் நடைபெற்ற பிரசார நிறைவுக் கூட்டத்தில் அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:
மாணவா்களின் உயா்கல்விக்காக 3 புதிய கல்லூரிகள், பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வாக காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம், இளைஞா்களின் அரசுப் பணிக் கனவை நனவாக்க போட்டித் தோ்வு பயிற்சி மையம், ரூ.1,050 கோடியில் மாபெரும் வளா்ச்சிப் பணிகள் என பல்வேறு திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தத் தொகுதிக்கு மேலும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயலாற்றுவதற்கு மக்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா்அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒட்டன்சத்திரம் - தொடா் சாதனை படைப்பாரா அர.சக்கரபாணி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அமைச்சா் அர.சக்கரபாணி வாக்கு சேகரிப்பு

ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளர்!
ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.68.95 கோடியில் வளா்ச்சித் திட்டங்கள்: அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தாா்
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


