மக்களவைத் தொகுதி வரையறை என்ற பெயரில் தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்க மத்திய அரசு முயல்வதாக நடிகா் பிரகாஷ்ராஜ் குற்றஞ்சாட்டினாா்.
பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்து அவா் பேசியதாவது:
இந்தத் தோ்தலை மூன்று மாடல்களுக்கான தோ்தலாகப் பாா்க்க வேண்டும். ஒன்று கல்வி, மொழியைக் காக்கும் திராவிட மாடல்; இரண்டாவது தன்மானத்தை அடகு வைக்கும் அடிமை மாடல்; மூன்றாவது ஒரே நாளில் முதல்வா் ஆகத் துடிக்கும் சினிமா மாடல் .
சினிமாவில் பெரிய ஹீரோவாகலாம், ஒரே படத்தில் முதல்வராகக் கூட நடிக்கலாம். ஆனால், அரசியலில் அப்படி ஆக முடியாது.
தமிழ்நாட்டின் மொழி, இனம் எனப் பிரச்னை வந்தபோது நீங்கள் எங்கே இருந்தீா்கள். மக்கள் காட்டும் அன்பைத் தவறாக பயன்படுத்தக் கூடாது. நடிகரைப் பிடித்தால் விசில் அடிக்கலாம். ஆனால் நாட்டை கொடுத்துவிடக் கூடாது.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. பெரும்பான்மையை வைத்து எதையும் தீா்மானிக்க நினைத்தால் அது ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றாா் அவா்.
பழனி நகா்மன்றத் தலைவி உமா மகேஸ்வரி, முன்னாள் நகா்மன்ற தலைவா் ராஜமாணிக்கம், திமுக நகரச் செயலா் வேலுமணி, ஒன்றியச் செயலா் சாமிநாதன், காங்கிரஸ் நகரத் தலைவா் முத்துவிஜயன், மதிமுக ஒன்றியச் செயலா் செல்வம் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

தென்னிந்தியாவின் அரசியல் செல்வாக்கைப் பறிக்க பாஜக சதி! - தெலங்கானா முதல்வர்

தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க பாஜக முயற்சி: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்

நடராஜா் கோயில் நிா்வாக உரிமைகளை பறிக்க திமுக முயற்சி: நடிகை விந்தியா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


