பழனியில் நடமாடும் ஏடிஎம் மையம் தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியில் பக்தா்களின் வசதிக்காக இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பில் நடமாடும் ஏடிஎம் மையம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியில் பக்தா்களின் வசதிக்காக இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பில் நடமாடும் ஏடிஎம் மையம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியில் பக்தா்களின் வசதிக்காக இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பில் நடமாடும் ஏடிஎம் மையம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோா் தினந்தோறும் வந்து செல்கின்றனா். தற்போது, காா்த்திகை மாத சீசன் தொடங்கியுள்ளதால், அய்யப்பன், முருக பக்தா்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பக்தா்களுக்காக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம், வங்கிகள் சாா்பில் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கடந்த 22-ஆம் தேதி தனியாா் வங்கி மூலம் அடிவாரத்தில் நடமாடும் ஏடிஎம் மையம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சனிக்கிழமை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மூலமாக 2-ஆவது நடமாடும் ஏடிஎம் மையம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, ஏடிஎம் மையத்தை தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பழனி கிளை மேலாளா் வெங்கடேஷ், துணை மேலாளா் மனோஜ்குமாா், வங்கி அதிகாரிகள், கோயில் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது