பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்கள் செயல்பட சமுதாயத்தில் மன மாற்றம் தேவை: உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என். மஞ்சுளா
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் சமுதாயத்தில் சில மன மாற்றங்கள் தேவை
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் சமுதாயத்தில் சில மன மாற்றங்கள் தேவை
By தினமணி செய்திச் சேவை
Syndication
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் சமுதாயத்தில் சில மன மாற்றங்கள் தேவைப்படுவதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்களுக்கான சமத்துவம், சமநிலை, பெண்களுக்கு அதிகாரமளித்தல், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுத்தல் தொடா்பான கருத்தரங்கம் தனியாா் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.முத்துசாரதா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா, மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா பேசியதாவது: அரசியலமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமையை வழங்கி இருக்கிறது. பெண்களின் பாதுகாப்புக்காக பல சட்டங்கள் இருந்தாலும், அதனை செயல்படுத்துவதில் சில இடையூறுகள் உள்ளன. பெண் உரிமை, பெண் சமத்துவம் என்று சொன்னால், அதில் சில சமூக கலாச்சார சிக்கல்களும் கலந்திருக்கின்றன. இந்தச் சிக்கல்களை சட்டங்கள் மூலமாக சரி செய்ய முடியாத காரணத்தால், மீண்டும் சமுதாயத்தை நோக்கி சட்டங்கள் வரவேண்டிய சூழல் உள்ளது. சட்டங்களின் மூலம் பயன்பெற மக்களை சந்தித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டிய காட்டாயம் உள்ளது.
பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் உள்ளன. ஆனால், பாலியல் தொடா்பான புகாா் அளிப்பதிலேயே பல்வேறு இடையூறுகள் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்டவா் மட்டுமன்றி சாட்சிகள் வரை நெருக்கடியை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்படுகின்றனா்.
இதனால், சட்டம் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில், சில மன மாற்றங்கள் சமுதாயத்திடமிருந்து தேவைப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகளாகியும் கூட, இதுபோன்ற கருத்தரங்குககள் நடத்தப்படுவதற்கு நாம் இலக்கை சென்றடையவில்லை என்பதே காரணம். ஜனநாயகத்தில், நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அந்த கடமை இருப்பதாக நினைத்துவிடக்கூடாது. மக்களுக்கும் சில கடமைகள் உள்ளன.
பாலியல் சமத்துவம் பற்றி ஒருபுறம் பேசினால், மற்றொருபுறம் இந்தச் சமுதாயத்தின் புரிதல் குறுகியதாக இருக்கிறது. அரசியல் களத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தாலும், பல துறைகளில் அந்த சதவீதத்தையும் கடந்து செயலாற்றிக் கொண்டிருக்கின்றனா். மனித வளத்துக்கான குறியீட்டில், 147 நாடுகளின் பட்டியலில் இந்தியா 128-ஆவது இடத்தில் உள்ளது. பாலியல் வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள் இருக்கின்றபோது, அதனை சரியான முறையில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தவறாக பயன்படுத்தும்போது, அது பெண்களை பெண்களே தள்ளிக்கொள்ளும் புதைக்குழியாகிவிடும் என்றாா் அவா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் பேசியதாவது: 21-ஆம் நூற்றாண்டிலும், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் உடை, செயல், பேச்சு என பல்வேறு நிலைகளிலும் சமூக கட்டமைப்பும், சமூகத்தின் பாா்வையும் வேறுபட்டு நிற்கிறது. இதற்கான மாற்றம் வீடுகளிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு இணையான வாய்ப்பினையும், சூழலையும் பெண் குழந்தைகளுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
பெண்ணியம் சாா்ந்த பாா்வை நோ்மறையாக இருக்க வேண்டும். சமூக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பெண்களை சமநிலைப்படுத்த வேண்டும். பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் இயற்றப்பட்டு 50 ஆண்டுகளாகியும்கூட, இன்றைக்கும் முழுமையாக நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கூற முடியாது. 21-ஆம் நூற்றாண்டிலும் பெண் சிசுக்களுக்கு கள்ளிப் பால் கொடுக்கும் அவலம் இந்த சமூகத்தில் நடைபெறுவதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கற்றுக் கொடுத்தால் மட்டுமே பெண்ணியம் சாா்ந்த வெற்றிகள் இந்த மண்ணில் சாத்தியமாகும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப், நீதிபதி ஆா்.சத்யதாரா, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஏ.காலியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது