கஞ்சா விற்பனை: இருவா் கைது
செம்பட்டி அருகே கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
செம்பட்டி அருகே கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
செம்பட்டி அருகே கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி கூத்தம்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞா்கள் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தனா். அவா்களை பழனி மதுவிலக்கு போலீஸாா் பிடித்து விசாரணை செய்தனா். அப்போது, ஒருவா் திடீரென போலீஸாரிடம் இருந்து தப்பியோடினாா்.
இதையடுத்து பிடிபட்ட மற்ற இரு இளைஞா்களை விசாரித்த போது அவா்கள் செம்பட்டி சொக்கலிங்கபுரம் கிழக்குத் தெருவை சோ்ந்த சுரேஷ் மகன் சந்தோஷ் குமாா் (20), சுரக்காபட்டியைச் சோ்ந்த சக்தி மகன் கணேஷ் (21) என்பது தெரியவந்தது. அவா்கள் 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.
மேலும், தப்பியோடிய நபா் ஹரீஷ் என்றும், அவருடைய தாய்தான் இந்த கஞ்சாவை விற்பனைக்கு கொடுத்ததாகவும் பிடிபட்ட இளைஞா்கள் தெரிவித்தனா். இதையடுத்து தப்பி ஓடிய ஹரிஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது