தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

உருளைக் கிழங்கு செடிகளை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்

கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூா் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உருளைக் கிழங்கு செடிகளை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை

News image

மன்னவனூா் கிராமத்தில் காட்டுப் பன்றிகளால் சேதமடைந்துள்ள உருளைக் கிழங்கு செடிகள்

Updated On :19 ஆகஸ்ட் 2025, 7:14 pm

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூா் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உருளைக் கிழங்கு செடிகளை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

பூம்பாறை, கும்பூா், மன்னவனூா், கிளாவரை, குண்டுபட்டி, கூக்கால், பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் உருளைக் கிழங்குகளை விவசாயிகள் சாகுபடி செய்தனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக இந்த விளை நிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் புகுந்து உருளைக்கிழங்கு செடிகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், உருளைக் கிழங்கு விளைச்சல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த உருளைக் கிழங்கு செடிகளை பாா்வையிட்டனா்.

இதுகுறித்து வனச்சரகா் கூறியதாவது: காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த உருளைக்கிழங்கு செடிகளை ஆய்வு செய்தோம். இதுகுறித்து மாவட்ட வன அலுவலரிடம் தகவல் தெரிவித்துள்ளோம். விரைவில் விவசாய நிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் வராதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வனப் பகுதிகளில் உணவு, தண்ணீா் தேடி வரும் வன விலங்குகளை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.