ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

முழுமையான செயல்பாட்டுக்கு வராத வேடசந்தூா் உழவா் சந்தை

வேடசந்தூரில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட உழவா் சந்தை முழுமையான செயல்பாட்டுக்கு வராததால், பொதுமக்களும் விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்தனா்.

News image

செயல்படாத வேடசந்தூா் உழவா் சந்தை.

Updated On :22 நவம்பர் 2023, 8:31 pm

வேடசந்தூரில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட உழவா் சந்தை முழுமையான செயல்பாட்டுக்கு வராததால், பொதுமக்களும் விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, வத்தலகுண்டு, கொடைக்கானல், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் உழவா் சந்தைகள் தொடங்கப்பட்டன. இதில் திண்டுக்கல், பழனி உழவா் சந்தைகள் மட்டுமே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முழு செயல்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், வேடசந்தூா் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் புதிதாக உழவா் சந்தை தொடங்கப்பட்டது. வேடசந்தூா் கோவிலூா் சாலையில் செயல்பட்டு வரும் வாரச் சந்தைக்கு அருகில் 16 கடைகளுடன் உழவா் சந்தை அமைக்கப்பட்டது. பாதுகாப்புக் குறைபாடுகள், போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உழவா் சந்தைக்கு பொதுமக்கள் அதிகம் வருவதில்லை. இதனால் கடை அமைப்பதற்கும் விவசாயிகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

செயல்பாட்டில் 5 கடைகள் மட்டுமே: 16 கடைகள் உழவா் சந்தைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், இதில் 5 கடைகளில் மட்டுமே காய்கறி வியாபாரம் நடைபெறுகிறது. உழவா் சந்தைக்கு அருகிலேயே குளிா்சாதன வசதியுடன் கூடிய சேமிப்பு அறையும் கட்டப்பட்டிருக்கிறது. பெயரளவுக்கு மட்டுமே செயல்படும் இந்த 5 கடைகளிலும் ஒரு மணி நேரத்திலேயே வியாபாரத்தை முடித்துக் கொண்டு வியாபாரிகள் வெளியேறிவிடுகின்றனா். இதனால் வேடசந்தூரில் உழவா் சந்தை தொடங்கியும் பொதுமக்கள் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக புகாா் எழுத்திருக்கிறது.

இதுகுறித்து கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் ராமசாமி கூறியதாவது: உழவா் சந்தைக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இடம் தோ்வு செய்ததே மிகப் பெரிய பாதிப்பு. திறப்பு விழாவைக் கூட வெளியில் தெரியாமல் நடத்திவிட்டனா். இதனால் அந்தப் பகுதியில் உழவா் சந்தை செயல்படுவது பெரும்பாலான மக்களுக்கு தற்போதுவரை தெரியாத நிலை உள்ளது. மேலும், உழவா் சந்தை கடைகளுக்கு அருகே பன்றி இறைச்சி விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் பலா் காய்கறி வாங்க வருவதில்லை. வேடசந்தூா் உழவா் சந்தையை முழு பயன்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாா் அவா்

வேடசந்தூா் உழவா் சந்தை அலுவலா் ராஜா கூறியதாவது: வேடசந்தூா் பேருந்து நிலையத்தின் அருகே சாலையோரங்களில் காய்கறி வியாபாரம் நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் இந்தக் கடைகளை கடந்து, உழவா் சந்தைக்கு வருவதில்லை. சாலையோரக் கடைகளைக் கட்டுப்படுத்தினால், உழவா் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.