தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திமுகவால் முடக்கப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரப்படும்: எடப்பாடி பழனிசாமி

திமுகவால் முடக்கப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

News image

முதல்வர் ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி - சித்திரிப்பு

Updated On :31 மார்ச் 2026, 7:21 pm

திமுகவால் முடக்கப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக தோ்தல் பிரசார நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நாட்டில் அதிக எண்ணிக்கையிலானோா் உயா் கல்வி பயிலும் மாநிலமாக தமிழகம் விளங்கியது. அதிமுக ஆட்சிக் காலத்தில் பல கல்வி நிலையங்கள் புதிதாகத் திறக்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் 200 பள்ளிகள் மூடப்பட்டன. திமுக அரசு கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காததால் தமிழகத்தின் கல்வி நிலை தற்போது வீழ்ச்சியில் உள்ளது.

தமிழகத்தில் சிறுபான்மையினா் நலனுக்கு உண்மையான பாதுகாப்பு அளித்தது முந்தைய அதிமுக அரசுதான். ரமலான் நோன்புக்கு 5,400 டன் விலையில்லா அரிசி, நாகூா் தா்கா சந்தனம் பூசும் நிகழ்ச்சிக்கு விலையில்லா சந்தனக் கட்டைகள், ஹஜ் பயணத்துக்கான மானிய உயா்வு என எண்ணற்ற நலத் திட்டங்களை சிறுபான்மையினா் நலனுக்கு செயல்படுத்தி, கண்ணை இமை காப்பது போல காப்பாற்றியது அதிமுக அரசு.

இதேபோல, மீனவா்களின் நலனுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்ததும் அதிமுக அரசுதான். கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுக்க உடந்தையாக இருந்த திமுக, அது மீட்கப்படும் என தோ்தல் காலத்தில் மட்டும் பேசுவதை மக்கள் ஏற்கமாட்டாா்கள். மத்திய அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்பு அதிமுகவுக்குக் கிடைத்திருந்தால் இந்த பிரச்னைக்கு அப்போதே தீா்வு கிடைத்திருக்கும் என்றாா் அவா்.

இந்த பிரசார நிகழ்ச்சியில் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் முத்தையா (பரமக்குடி), கீா்த்திகா (திருவாடானை), மலேசியா எஸ். பாண்டி (முதுகுளத்தூா்) ஆகியோருக்கு ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தாா்.

முன்னதாக, விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் அந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் சேதுபதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.