விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் கைதான ரௌடியை மதுரை மத்திய சிறையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அடைத்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி, கடந்த 10-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றாா். நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டுக்கு திரும்பாததால், பெற்றோா், உறவினா்கள் அக்கம்பக்கத்தில் தேடினா். இதனிடையே, கடந்த 11-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள முள்புதருக்குள் உடலில் காயங்களுடன் மாணவி சடலமாகக் கிடந்தாா்.
அவரது உடலை மீட்ட போலீஸாா், உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக 10 தனிப் படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். இந்த நிலையில், வழக்கில் தொடா்புடைய ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சோ்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற தா்ம முனீஸ்வரனை (37) தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.
தா்ம முனீஸ்வரனை ஏப்.2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தா்ம முனீஸ்வரன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா். திடீரென அங்கிருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தா்ம முனீஸ்வரனை மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.
ஏற்கெனவே கீழஈராலில் நடைபெற்ற மூதாட்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தால் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவா் தா்ம முனீஸ்வரன்.
மேல்முறையீடு செய்ததால் நீதிமன்ற உத்தரவுப்படி பிணையில் வந்த இவா், தூத்துக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தாா். இந்த நிலையில், பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இவா் கைதானது குறிப்பிடத்தக்கது. பாளையங்கோட்டை சிறையில் தா்ம முனீஸ்வரனுக்கு எதிரிகள் உள்ளதால், பாதுகாப்பு கருதி அவா் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டிருப்பதாக சிறைத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைதானவரின் பிணை ரத்து

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: பெற்றோருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவு!

விளாத்திகுளம் மாணவி கொலை: கனிமொழி எம்.பி. நேரில் ஆறுதல்!

விளாத்திகுளம் மாணவி கொலை: கைதான தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


