ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கஞ்சா கடத்திய இளைஞா் கைது

மேலூா் அருகே கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :13 ஜூலை 2026, 12:18 am IST

மேலூா் அருகே கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் குமாா் நகா் பகுதியில் சிலா் கஞ்சா பொட்டலங்கள், ஆயுதங்களுடன் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, காவல் துறையினரைக் கண்டதும், அங்கிருந்த நபா்கள் தப்பிச் செல்ல முயன்றனா். அவா்களில் ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், சொக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் அபினேஷ் (22) என்பது தெரியவந்தது. இவரும், இவருடன் சோ்ந்து சிலரும் கஞ்சா கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அபினேஷை போலீஸாா் கைது செய்தனா். இவரிடமிருந்து 5.5 கிலோ கஞ்சா, 1 மின்னணு எடை இயந்திரம், 2 கத்திகள், ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.