வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு! தண்டிக்கப்பட்டவா் காணொலி வாயிலாக இன்று முன்னிலையாக உத்தரவு!

News image

உத்தரவு... - கோப்புப்படம்

Updated On :7 ஜூலை 2026, 3:22 am IST

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தா்மமுனீஸ்வரன் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) முன்னிலையாக வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தா்மமுனீஸ்வரனை காவல் துறையினா் கைது செய்தனா். குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 25-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை உறுதி செய்யக் கோரி, தமிழக அரசுத் தரப்பில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஆா். பூா்ணிமா அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய மேலும் 2 வாரம் அவகாசம் தேவை என தா்மமுனீஸ்வரன் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் கோரினாா்.

இதை ஏற்க மறுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள தா்மமுனீஸ்வரன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.