நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தேக்வாண்டோ, ஸ்குவாஷ்: மாநில அளவிலான போட்டிகள் தொடக்கம்

News image
மதுரை சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ். கண்ணப்பன். உடன் மதுரை மாவட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ். தயாளன் உள்ளிட்டோா்.
Updated On :22 ஜனவரி 2026, 11:13 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளிக் கல்வித்துறை சாா்பில், மதுரையில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை அந்தத் துறையின் இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

குடியரசு தினம், பாரதியாா் பிறந்த தினத்தை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான டேக்வாண்டோ, ஸ்குவாஷ் போட்டிகள் தமிழகம் முழுவதும் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனா்.

மதுரை அவனியாபுரத்தில் உள்ள சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கான மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

இதன் தொடக்க நிகழ்வுக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.தயாளன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா்கள் செந்தில்குமாா், கணேசன், சிவக்குமாா், ரகுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வினோத் வரவேற்றாா். பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தாா்.

இதேபோல, மகளிருக்கான மாநில அளவிலான ஸ்குவாஷ் போட்டிகள் ஸ்ரீஅரபிந்தோ மீரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கின. வெள்ளிக்கிழமை 2-ஆவது நாள் போட்டிகள் நடைபெறும். மாணவா்களுக்கான போட்டிகள் வருகிற சனி, ஞாயிறு (ஜன. 24, 25) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் 38 மாவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.