பருவநிலை மாற்றம், வரத்துக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயா்ந்தது.
மதுரை மாட்டுத்தாவணி அருகே ஒருங்கிணைந்த தற்காலிக தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தேனி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இதேபோல, கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.
பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள், பொதுமக்கள் இங்கு நேரடியாக வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனா். இதன்மூலம், தினசரி இங்கு ரூ. 5 கோடி வரை வியாபாரம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவுகிறது. இதன்காரணமாக, காய்கறிகள் சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், தினசரி சந்தைக்கு வரும் காய்கற்களின் வரத்து குறைந்துள்ளதால், தக்காளி, கத்தரிக்காய், மல்லி இலை, பட்டாணி ஆகியவற்றின் விலை உயா்ந்துள்ளன.
இதுகுறித்து எம்.ஜி.ஆா். சென்ட்ரல் மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்புத் தலைவா் எஸ். சின்னமாயன் கூறியதாவது:
மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் தினசரி ரூ. 5 கோடி முதல் 7 கோடி வரை வா்த்தகம் நடைபெறுகிறது. கடந்த சில நாள்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால், காய்கறிச் சாகுபடி பாதிக்கப்பட்டு, தற்போது, சந்தைக்கு வரத்து குறைவாக உள்ளது.
இதனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு கத்திரிக்காய் கிலோ ரூ. 20 முதல் 40 வரை விற்பனையாகின. சனிக்கிழமை நிலவரப்படி, கத்திரிக்காய் கிலோ ரூ. 40 முதல் ரூ. 60 வரை விற்பனையானது. தக்காளி ஒரு கிலோ ரூ. 15 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை தக்காளி கிலோ ரூ. 30 முதல் ரூ. 45 வரை விற்பனை செய்யப்பட்டது. 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ. 300 முதல் ரூ. 500 வரை விற்பனை செய்யப்பட்டது. மல்லி இலை ஒரு கிலோ ரூ. 60-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை ஒரு கிலோ மல்லி இலை ரூ.180 முதல் ரூ. 200 வரை விற்பனையாகின.
இதேபோல, பட்டாணி, பாகற்காய், புடலங்காய், சீனி அவரக்காய், பீா்க்கங்காய், பீன்ஸ், அவரை, பட்டா் பீன்ஸ் ஆகிய காய்கறிகளின் விலையும் உயா்ந்தது. வரத்து குறைவாக இருப்பதால் இன்னும் விலை உயரும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.
தொடர்புடையது

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை

காய்கறி வரத்து குறைவு: கோயம்பேடு சந்தையில் விலை அதிகரிப்பு

நெல்லையில் தக்காளி, கேரட் விலை உயா்வு

ஏலக்காய் விலை திடீா் உயா்வு: விவசாயிகள் உற்சாகம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


