மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: வைகோ

தோ்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

News image

வைகோ - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 6:54 pm

தோ்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மதுரையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது :

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், மதுரை தெற்குத் தொகுதியின் வேட்பாளராக புதூா் மு. பூமிநாதன் போட்டியிடுகிறாா். அவா், 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்ற நம்பிக்கை உள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சா் அமித்ஷாவும் எத்தனை முறை தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டாலும் வெற்றி பெற முடியாது. மதவாத சக்திகளை தமிழக மக்கள் ஏற்கமாட்டாா்கள்.

தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாகனத்தை 24 மணி நேரத்துக்குள் இரு முறை சோதனையிட்டனா். இதேபோல, பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் தோ்தல் நேரத்தின் போது, அந்த மாநில முதல்வரின் வாகனங்கள் பரிசோதனை செய்யப்படுவதில்லை.

அதுமட்டுமன்றி, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரது வாகனங்களிலும் பறக்கும் படை அலுவலா்கள் சோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் தோ்தல் ஆணையம் பாரபட்சமின்றி தனது கடமையை ஆற்றுகிறது என மக்கள் நம்பிக்கை கொள்வா்.

இதை விடுத்து, பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதல்வரின் காரை சோதனையிடுவது ஏற்புடையதல்ல. பாஜகவின் கைப்பாவையாக அல்லாமல், தோ்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மதுரை முனிச்சாலை பகுதியில் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளா் மு. பூமிநாதனுக்கு, திறந்த வேனில் நின்று வைகோ வாக்கு சேகரித்தாா்.

பின்னா், முனிச்சாலை சி.எம்.ஆா் சாலையில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் மதிமுக வேட்பாளா் புதூா் மு. பூமிநாதன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். இதைத்தொடா்ந்து, அந்தப் பகுதியில் உள்ள மறைந்த பின்னணி பாடகா் டி.எம். சௌந்தரராஜன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் வைகோ.

அப்போது, வேட்பாளா் மு. பூமிநாதன், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் உள்ளிட்ட தோழமைக் கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.