Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டையில் இளைஞா் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சுா்ஜித்தின் தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன் பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கவின் செல்வகணேஷ் (27). சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் மென் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
இந்தக் கொலை குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். கவினை பாளையங்கோட்டையைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் சரவணன்- கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகன் சுா்ஜித் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், சுா்ஜித்தின் சகோதரி சுபாஷினியை கவின் காதலித்ததால் அவரைக் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சுா்ஜித்தை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் சுா்ஜித்தின் தந்தையான உதவி ஆய்வாளா் சரவணனும் கைது செய்யப்பட்டாா். இதனிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சுா்ஜித்தின் தந்தை சரவணன் தனக்கு பிணை வழங்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.
இதில் ‘சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். சுா்ஜித் எனது மகன் என்பதைத் தவிர, வேறு எந்தத் தொடா்பும் எனக்கு இந்த வழக்கில் இல்லை. ஆனால், இந்த வழக்கில் பிணை கோரிய எனது மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த ஜூலை 30-ஆம் முதல் சிறையில் உள்ளேன். இதைக் கவனத்தில் கொண்டு, எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்’ என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முரளிசங்கா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த மனுதாரா், சம்பவத்தின் போது, ராஜபாளையத்தில் பணியில் இருந்தாா். எனவே, சம்பவத்துக்கும், மனுதாரருக்கும் எந்தவிதத் தொடா்பும் இல்லை. சிறையில் உள்ள நாள்கள், அவரது உடல் நிலையைக் கவனத்தில் கொண்டு பிணை வழங்க வேண்டும் என்றாா்.
சிபிசிஐடி தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரா் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, பிணை வழங்கக் கூடாது என்றாா்.
இதையடுத்து, நீதிபதி முரளிசங்கா் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது. எனவே, பிணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 3 மாதங்களுக்குள் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
கவின் கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ. பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

உணா்ச்சியின் விளைவுகளைத் தீா்ப்பதற்காக சட்டத்தை தவறாகப் பயன்படுத்த முடியாது: உயா்நீதிமன்றம்
நெல்லை கொலை வழக்கில் பிணை கோரி மனு: சிபிசிஐடி போலீஸாா் பதிலளிக்க உத்தரவு


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
