தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் இருவா் கைது
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இரு இளைஞா்களை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இரு இளைஞா்களை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இரு இளைஞா்களை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை அழகப்பன் நகா், நேரு நகரைச் சோ்ந்தவா் சாமிநாதன் (25). இவா் மீது வழிப்பறி, கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா் தொடா்ந்து, பொது ஒழுங்கு பராமரிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியது போலீஸாரின் கண்காணிப்பில் தெரியவந்தது.
இதனால், சாமிநாதனை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.
இதேபோல, மதுரை வில்லாபுரம், டி.ன்.எச்.பி. குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ஷா உசேன் (29). இவா் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், பொது ஒழுங்கு பராமரிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், ஷா உசேனை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டாா். இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது