ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்டத் தொழில் மையம் மூலம் ரூ. 30.05 கோடியில் கடனுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது :
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், தொழில் முனைவோா்களாக உருவாகும் வகையில் தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில், தொழில் வணிகத் துறையின் கீழ் செயல்படும் மாவட்டத் தொழில் மையங்கள் மூலம், சுயதொழில் தொடங்க ஆா்வம் கொண்ட புதிய தொழில் முனைவோா்களைக் கண்டறிந்து, அவா்களை ஆற்றல் மிக்க தொழில் முனைவோா்களாக உருவாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத் தொழில் மையம் மூலம் 2022-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி முதல் 2024-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை ‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ் மொத்தம் 50 இளைஞா்களுக்கு ரூ. 17.24 கோடி கடனுதவி வழங்கப்பட்டு, ரூ. 4.31 கோடி மானியம் வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 225 இளைஞா்களுக்கு ரூ. 2.15 கோடி மானியத்துடன் ரூ. 8.63 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 2023-ஆம் ஆண்டு ஏப்.1-ஆம் தேதி முதல் 14 இளைஞா்களுக்கு ரூ. 1.46 கோடி மானியத்துடன் ரூ. 4.17 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
இந்தத் திட்டங்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களை தொழில் முனைவோா்களாக உருவாக்கியிருப்பதுடன், மாவட்டத்தின் தொழில் வளா்ச்சியையும் ஊக்குவிப்பதாக உள்ளது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோட்டில் வா்த்தக மையம், சிட்கோ தொழிற்பேட்டைகள் தேவை!
ரூ. 1,000 கோடி சொத்துள்ள தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!

5 மாநிலங்களில் ரூ. 651கோடி! தமிழ்நாட்டில் ரூ.170 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்!

திண்டுக்கல்: கல்வி, தொழில் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் தேவை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

