மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை

போடி, செப். 14:÷போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பல பணிகள் தேக்கமடைந்துள்ளன. தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம், போடி

Updated On :20 செப்டம்பர் 2012, 12:24 am

போடி, செப். 14:÷போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பல பணிகள் தேக்கமடைந்துள்ளன. தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி மாவட்டம், போடி வட்டத்தில் போடிநாயக்கனூர், மேலச்சொக்கநாதபுரம், மேற்குமலை, வடக்குமலை, கொட்டகுடி, அகமலை, கோடாங்கிபட்டி, பூதிப்புரம் உள்பட 15 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றின் கீழ் 71 உட்கடை கிராமங்கள் உள்ளன. போடி நகராட்சி, மேலச்சொக்கநாதபுரம், மீனாட்சிபுரம், பூதிப்புரம் பேரூராட்சிகளும் போடி வட்டத்தில் உள்ளது.

இப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்று, பட்டா மாறுதல், சிட்டா, அடங்கல், புதிய ரேஷன் அட்டை, நலத் திட்ட உதவிகள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு சான்றுகள் மற்றும் ஆவணங்களைப் பெற போடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வருகின்றனர்.

ஆனால், அதற்கேற்ப போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் போதிய ஊழியர்கள் இல்லை. இதனால் பல பணிகள் தேக்கமடைந்துள்ளன.

நிலம் சர்வே செய்வதற்கு விண்ணப்பித்து ஒரு மாதத்துக்கு பின்புதான் பணிகள் நடைபெறுகின்றன. பட்டா மாறுதல், பட்டா பெறுதல் போன்ற பணிகளுக்கு 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகின்றன. வாரிசு சான்று பெற ஒரு மாதம் ஆகிறது. கணினி பிரிவில் தானியங்கி தகவல் தரும் கணினி இயந்திரம் பழுதடைந்து பல மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு ஏராளமான மனுக்கள் குவிந்து வருகின்றன. ஆனால் அவற்றுக்கு விரைவாக பதில் கிடைப்பதில்லை.போடி வட்டத்தில் உள்ள 15 வருவாய் கிராமங்களில் தற்போது 9 கிராம நிர்வாக அலுவலர்களே பணியில் உள்ளனர். அகமலை, வடக்குமலை, மேற்குமலை ஆகிய மலை கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால், அப்பகுதியினர் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து போடி வட்டாட்சியர் வ. ஜெயக்கொடியிடம் கேட்டபோது, வட்டாட்சியர் அலுவலகத்தில் 7 உதவியாளர் பணியிடம் உள்ளது. ஆனால் 3 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதிலும் 2 பேர் பயிற்சிக்காக சென்றுவிட்டனர். ஒரு பணியாளரை வைத்து அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதனால் அவசரம் என வரும் பணிகளை மட்டும் செய்கிறோம். இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தல், கிரைண்டர், மிக்ஸி வழங்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. தகவல் தரும் கணினி இயந்திரதை பழுது நீக்கம் செய்ய பெங்களூரிலிருந்து பொறியாளர்கள் வரவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.