மதுரை, ஆக.2: இடைநின்ற மாணவர்களுக்கு கல்வி அளிக்க அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவரும் நிலையில், கல்வி கற்க ஏங்கி வருகின்றனர் மதுரையில் சாலையோரத்தில் பொம்மைகள் தயாரித்து பிழைப்பு நடத்திவரும் ராஜஸ்தான் மாநிலத்தவரின் குழந்தைகள்.
பழைய ஆடை, எண்ணெய் இல்லாத கேசம், ஒட்டிய வயிறு இவற்றின் மொத்த உருவங்களாய் காட்சியளிக்கும் அந்தச் சிறார்கள், மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் பொம்மைகள் தயாரிக்கும் பணியில் பெற்றோர்களுக்கு உதவியாய் இருந்துவருகிóன்றனர்.
ராஜஸ்தான், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மார்வாடி மற்றும் ஹிந்தி மொழி பேசும் சிலர் குடும்பம், குடும்பமாக மதுரை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் சாலையோரங்களில் தங்கி, பொம்மைகள் தயாரித்து விற்று வருகின்றனர்.
இவர்களுக்குப் போதிய கல்வி அறிவு இல்லாததால் தங்களது குழந்தைகளையும் இத்தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம், காளவாசல் உள்ளிட்ட சில இடங்களில் சாலையோரத்தில் கூடாரம் அமைத்து இவர்கள் வாழ்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இருந்த நிலையில், தற்போது சுமார் 30 குடும்பத்தினரே வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை தங்களது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பி வருவதாக கூறப்படுகிறது.
இவர்கள் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் என்ற பொருள் கொண்டு திருவள்ளுவர், கிருஷ்ணர், விநாயகர், திருஷ்டி பொம்மைகளைத் தயாரித்து விற்று வருகின்றனர்.
நான் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு படிக்க வேண்டும் என்று நிறைய ஆசை உள்ளது. ஆனால், குடும்பச் சூழல் காரணமாக பள்ளிக்குச் செல்ல
முடியவில்லை. மேலும், எங்கள் பகுதிக்கு நேரில் வந்து சொல்லிக் கொடுத்தால் நான் படிக்க ஆர்வமாக உள்ளேன் என்று மாட்டுத்தாவணி பகுதியில் பொம்மை ஒன்றுக்கு வர்ணம் தீட்டிக்கொண்டே ஆர்வத்துடன் கூறினான் முத்துராஜ் (12) என்ற சிறுவன்.
ஜமுனா என்ற பெண் கூறுகையில், எங்கள் பிள்ளைகளை எங்கு சென்று கல்வி பயிலச் செய்வது என்று தெரியவில்லை. ஆனால், குழந்தைகள் படிக்க ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கான படிப்பும், உதவியும் அளித்தால் மிக நன்றாக இருக்கும் என்றார்.
மற்றொரு சிறுவன் கபூர் கூறுகையில், நான் 7-ம் வகுப்பு வரைபடித்துள்ளேன். ஹிந்தி எழுதப் படிக்கத் தெரியும். ஆனாலும், தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். பொருளாதாரச் சூழல் தடுக்கிறது என்றான். இதேபோன்று வேறு சில சிறுவர்களும் தங்களது கருத்தைத் தெரிவித்தனர்.
இச்சிறார்கள் பள்ளிகள் செல்ல வேண்டிய வயதில் தளிர் கரங்களில் பொம்மைகளைச் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்கமானது நடமாடும் பள்ளிகளை ஏற்படுத்தி அதன் மூலம் கோவை, சென்னை, மதுரை போன்ற மாநகராட்சிகளில் இடைநின்ற அல்லது பள்ளிசெல்லாத 6 வயது முதல் 14 வயதுக்குள்பட்ட சிறார்களைக் கண்டறிந்து கல்வி அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உத்தேசித்திருந்த நிலையில் அத்திட்டம் செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து தமிழகத்திற்கு வருவோரின் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க நடமாடும் பள்ளிகள் திட்டம் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
புலம் பெயர்ந்து வருவோருக்காக, மாநிலங்களுக்கு இடையேயான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தும் இதுபோன்ற குழந்தைகள் சிறப்புக் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்படாமல் விடுபட்டுப் போவது ஏனோ?
பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கான உண்டு-உறைவிடப் பள்ளிகள், உறைவிடமில்லாத இணைப்பு மையங்கள் ஆகியவை தன்னார்வலர்களைக் கொண்டு மாவட்டங்களில் பல இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருதாக மதுரை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், சாலையோரவாழ் வெளிமாநிலத்தவரின் குழந்தைகளுக்கு அவர்களது இருப்பிடத்திற்கே சென்று அவர்களுக்குத் தெரிந்த ஹிந்தி மொழியிலோ, அவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு மொழியிலோ பாடம் நடத்திட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது குறித்து அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மாநில திட்ட இயக்குநர் ஆர்.வெங்கடேஷனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, இது தொடர்பாக உரிய விவரம் கேட்கப்பட்டு, சாலையோர வாழ் வெளிமாநிலத்தவரின் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதற்கான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

