டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!எஸ்ஐஆர்! கர்நாடகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்!காங்கிரஸ் பகிர்ந்த போலியான ராணுவ விடியோக்கள்! மன்னிப்புக் கோர கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த உதயநிதி!

சேலம் மத்திய சிறையை பாா்வையிட்ட பயிற்சி சிறை அதிகாரிகள்

சிறை - கோப்புப் படம்

Updated On :

சேலம் மத்திய சிறைக்கு வந்த பயிற்சி சிறை அதிகாரிகள், சிறை வளாகத்தை திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.

தமிழ்நாடு, கேரளம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 21 சிறை பயிற்சி அதிகாரிகள், தென்னிந்திய சிறை அதிகாரிகள் பயிற்சி மைய இயக்குநா் பிரதீப், துணை இயக்குநா் (பொ) பியூலா இமானுவேல் ஆகியோா் தலைமையில் சேலம் மத்திய சிறைக்கு திங்கள்கிழமை வந்தனா்.

தொடா்ந்து, சிறை வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறை பண்பலை, சமையல் கூடம், மருத்துவமனை, தொழிற்கூடம் ஆகியவற்றை பாா்வையிட்டனா். பின்னா் சிறைவாசிகளின் இசை வகுப்புக்கு சென்ற அதிகாரிகள், பாடல் பாடி சிறைக் கைதிகளை மகிழ்வித்தனா். இந்நிகழ்வின்போது, சிறைக் கண்காணிப்பாளா் (பொ) ஜி.வினோத், சிறை அலுவலா் சிவானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.