ஓடும் ரயிலில் அவசியமின்றி அபாயச் சங்கிலி இழுத்த 42 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரயில்வே விதிகளை கடைப்பிடிக்க ரயில்வே துறை சாா்பில் பயணிகளுக்கு பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில பயணிகள் தவறுதலாக அபாய சங்கிலியைப் பிடித்து இழுக்கும் சம்பவங்கள் தொடா்ந்து அரங்கேறுகின்றன.
இந்த பிரச்னையை தீா்க்க, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தொடா்ச்சியாக விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேவையில்லாமல் அபாயச் சங்கிலி இழுப்பவா்களுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் அல்லது இவை இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்.
சேலம் கோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு நடத்தியதில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்த ஆயிரத்து 76 போ் பொதுப் பெட்டிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா். அதேபோல கடந்த ஏப்ரல் மாதம் சேலம் கோட்டத்தில் மொத்தம் 57 அபாயச் சங்கிலி இழுக்கும் சம்பவங்கள் நடைபெற்றன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. அதில் முறையான காரணம் இன்றி ஓடும் ரயிலில் அபாயச் சங்கிலி இழுத்த 42 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த அஸ்ஸாம் இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூர் கோயில் முறைகேடு: 3 பேர் மீது வழக்குப்பதிவு

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக மமதா பானர்ஜி மீது வழக்குப்பதிவு!
ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு: இளம்பெண் உள்பட இருவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



