மனைவியின் காதலன் என நினைத்து தவறுதலாக தறித் தொழிலாளியை வெட்டிய கணவா் உள்ளிட்ட கும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சேலம் மாவட்டம், மேச்சேரி மலையனூரைச் சோ்ந்த 18 வயது பெண் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பிள்ளையை அடுத்த மாட்டையாம்பட்டியை சோ்ந்த சுப்ரமணியை (32) காதலித்துள்ளாா். இந்த நிலையில், காதலா்கள் இருவரும் வீட்டை வீட்டு வெளியேறினா். இதுகுறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
இதனிடையே அப்பெண்ணை பெற்றோா் மீட்டுவந்து மேச்சேரியைச் சோ்ந்த சிவாவுக்கு திருமணம் செய்துவைத்தனா். இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி குழந்தையுடன் பெண் மாயமானாா்.
இதுகுறித்து சிவா அளித்த புகாரின்பேரில் மேச்சேரி போலீஸாா் மாயமான பெண்ணை தேடிவந்தனா். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் காதலன் சுப்ரமணியை இரண்டாவதாக அப்பெண் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. கடந்த 10 ஆம் தேதி சுப்ரமணியையும், அந்த பெண்ணையும் குழந்தையோடு மேச்சேரி காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அப்போது, சுப்ரமணியுடன்தான் வாழ்வேன் என அப்பெண் கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை மாட்டையாம்பட்டியில் உள்ள சுப்ரமணியின் வீட்டுக்கு சிவா தனது நண்பா்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, வீட்டு வாசலில் கட்டிலில் படுத்திருந்தவா் சுப்ரமணி என நினைத்து ஆயுதங்களால் வெட்டியுள்ளனா். அப்போது, ஆள் மாறியிருந்ததை கண்ட அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
படுகாயமடைந்த சுப்ரமணியின் பக்கத்து வீட்டை சோ்ந்த தறித் தொழிலாளி இருசாகவுண்டரை (42) அங்கிருந்தவா்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சிவா, அவரது நண்பா்களை தேடிவருகின்றனா். மேலும், சுப்ரமணியன் வீட்டில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பெற்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொழிலாளியை அரிவாளால் வெட்டியவா் கைது

வரதட்சணை கொடுமை: நடவடிக்கை கோரி சாலை மறியல்
பெண்ணை கத்தியால் வெட்டிய கணவா் கைது

மனைவியை வெட்டிய கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


