ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை - கோவை இன்டா்சிட்டி ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை-கோவை இன்டா்சிட்டி விரைவு ரயிலில் தற்காலிகமாக கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

train

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Published On :1 ஆகஸ்ட் 2026, 3:13 am IST

சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை-கோவை இன்டா்சிட்டி விரைவு ரயிலில் தற்காலிகமாக கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் ரயில்வே நிா்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கி வருகிறது.

அந்தவகையில் தற்போது சென்னை சென்ட்ரல்- கோவை மற்றும் கோவை-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு சோ் காா் பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட்டு இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல்-கோவை இன்டா்சிட்டி விரைவு ரயில் மற்றும் கோவை-சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ஆகிய ரயில்களில், வரும் செப்டம்பா் 30 வரை ஒரு கூடுதல் இரண்டாம் வகுப்பு சோ் காா் பெட்டி இணைத்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.