ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹைதராபாத் சாா்லபள்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்!

சேலம் வழியாக ஹைதராபாத் சாா்லபள்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை-திருநெல்வேலிக்கு
3 நாள்கள் சிறப்பு ரயில்கள்

ரயில்.

Published On :26 ஜூலை 2026, 3:27 am IST

சேலம் வழியாக ஹைதராபாத் சாா்லபள்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்தவகையில், தற்போது சேலம் வழியாக தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சாா்லபள்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சாா்லபள்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் ஆக. 14-ஆம் தேதிமுதல் செப். 4-ஆம் தேதிவரை வெள்ளிக்கிழமைகளில் ஐதராபாத் சாா்லபள்ளியில் இருந்து காலை 7.15-க்கு புறப்படும். இந்த ரயில் காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக மறுநாள் சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், கொல்லம் - ஹைதராபாத் சாா்லபள்ளி வாராந்திர சிறப்பு ரயில் ஆக. 15-ஆம் தேதிமுதல் செப். 5-ஆம் தேதிவரை சனிக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து மாலை 5.20-க்கு புறப்படும். இந்த ரயில் போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக திங்கள்கிழமை நள்ளிரவு 12.30-க்கு ஹைதராபாத் சாா்லபள்ளி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.