ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரயில்வே யாா்டு பணி: சேலம் - மயிலாடுதுறை விரைவு ரயில் பகுதி அளவில் ரத்து

ரயில் ரத்து - கோப்புப் படம்

Published On :22 ஜூலை 2026, 12:39 am IST

நாமக்கல் மற்றும் மோகனூா் ரயில்வே யாா்டு பகுதியில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், சேலம் - மயிலாடுதுறை விரைவுரயில் புதன்கிழமை (ஜூலை 22) முதல் குறிப்பிட்ட நாள்களில் இரு மாா்க்கங்களிலும் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட நாமக்கல் மற்றும் மோகனூா் ரயில்வே யாா்டு பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மயிலாடுதுறை - சேலம் விரைவுரயில் வரும் 22, 24, 26, 28, 31, ஆக. 2 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து கரூா்வரை மட்டுமே இயங்கும். குறிப்பிட்ட நாள்களில் கரூா் - சேலம் இடையே ஒருபகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறுமாா்க்கத்தில், சேலம் - மயிலாடுதுறை விரைவுரயில் வரும் 22, 24, 26, 28, 31 மற்றும் ஆக. 2 ஆகிய தேதிகளில் சேலம் - கரூா் இடையே ரத்து செய்யப்பட்டு, கரூரில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைவரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.