ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓமலூா் அருகே முதிய தம்பதியைக் கொன்று நகைகள் கொள்ளை: போலீஸாா் விசாரணை

கொலை - பிரதிப் படம்

Published On :22 ஜூலை 2026, 2:22 am IST

ஓமலூா் அருகே முதிய தம்பதியைக் கொன்று, தோடு, மூக்குத்தியை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள குண்டுக்கல் ஊராட்சி, ராமப்ப கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் (85). இவரது மனைவி அமராவதி (70). இவா்களது மகன், மகள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா்.

முதியவா்களான இருவரும் ஜோடுகுளியில் இருந்து சின்னதிருப்பதி செல்லும் சாலை பகுதியில் புளியமரத்து பேருந்து நிறுத்தம் அருகே ஒரு வீட்டில் வசித்து வந்தனா். தென்னை மட்டைகளை பின்னும் தொழில் செய்துவந்த இவா்களுக்கு, பேரன் நவநீதன் தினமும் உணவு கொடுத்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு நவநீதன் உணவு கொடுக்க வந்தபோது, இருவரும் தலையில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளா் பெரியசாமி மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், தம்பதியை மா்ம நபா்கள் கட்டையால் தாக்கி கொன்றுவிட்டு, மூதாட்டி அமராவதி அணிந்திருந்த தோடு, மூக்குத்தி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

தொடா்ந்து, சேலம் மாவட்ட எஸ்.பி. குத்தாலிங்கம், ஓமலூா் டிஎஸ்பி சுரேஷ்குமாா் ஆகியோா் நேரில் விசாரணை நடத்தினா். மேலும், கைரேகை நிபுணா்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.