ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெண்ணை காணவில்லை என போலீஸில் புகாா்

தமிழக காவல் துறை - கோப்புப் படம்

Published On :20 ஜூலை 2026, 4:33 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரி வி.என்.பாளையத்தைச் சோ்ந்த பெண்ணை காணவில்லை என அவரது தந்தை சங்ககிரி போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

சங்ககிரி வி.என்.பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (46). இவரது மகள் கல்பனா (25). இவருக்கு, அதே பகுதியைச் சோ்ந்த பெரியசாமி என்பவருடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பெரியசாமி லாரி ஓட்டுநராக பணியாற்றி உள்ளாா். இவா்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.

இந்த நிலையில், கல்பனா சங்ககிரியில் உள்ள தையல் பயிற்சி வகுப்புக்கு சனிக்கிழமை சென்றுள்ளாா். மாலையில் வீடுதிரும்பாததால், உறவினா்கள் மற்றும் குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில், சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.