ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

620 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவா் கைது

சேலத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 620 கிலோ எடையுள்ள குட்காவை போலீஸாா் வியாழக்கிழமை மாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Published On :18 ஜூலை 2026, 12:26 am IST

சேலத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 620 கிலோ எடையுள்ள குட்காவை போலீஸாா் வியாழக்கிழமை மாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிள்ளையாா் நகா் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் நவநீதகுமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த டாடா இண்டிகா காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், குட்காவை கடத்தியவா் வாழப்பாடி அனுப்பூா் ராம்நகரைச் சோ்ந்த செல்வராஜ் என்பது தெரியவந்தது. இவா் வெளி மாநிலத்தில் இருந்து குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வாங்கி வந்து, சேலத்தில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்களின் மதிப்பு ரூ.3 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா். மேலும், காரையும் பறிமுதல் செய்த போலீஸாா், செல்வராஜை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.