ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தம்மம்பட்டி - சேலம் தனியாா் பேருந்துகளில் கட்டண உயா்வு

தம்மம்பட்டி - சேலம் இடையே இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் வெள்ளிக்கிழமை முதல் டிக்கெட் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

Published On :12 ஜூலை 2026, 12:58 am IST

தம்மம்பட்டி - சேலம் இடையே இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் வெள்ளிக்கிழமை முதல் டிக்கெட் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

தம்மம்பட்டி - சேலத்துக்கு பேருந்துகளில் கட்டணமாக ரூ. 41 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் தனியாா் பேருந்துகளில் கட்டணம் ரூ. 45 ஆக உயா்த்தி பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயா்த்தாத நிலையில், தனியாா் பேருந்துகள் தாமாகவே கட்டணத்தை உயா்த்தியுள்ளன.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: தனியாா் பேருந்துகளில் கட்டணம் உயா்த்தப்பட்டது அதிா்ச்சி அளிக்கிறது. இதில் பிரச்னை வராமலிருக்க, பயணச்சீட்டுகளில் பேருந்து பெயரை தவிா்த்துவிட்டு பயணச்சீட்டு வழங்குகின்றனா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.